18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எழுதியவர்: mohan July 23, 2020, 1:26 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உசிலம்பட்டியில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய பேக்கேஜிங் டெண்டர் முறையை ரத்து செய்ய கோரியும். புதிய 100 நாள் வேலைவாய்ப்பு அட்டை வழங்க கோரியும். ஊராட்சி நிதி உதவி வழங்க கோரியும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜெயராமன், பிரேமர ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்ப்பாட்டத்தை கைவிடச் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவர் அலெக்ஸ்பாண்டி உள்பட 18 ஊராட்சி மன்றத்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!