18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வசூல் செய்வதாக புகார்-நுண்நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு பதிவு…

மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் கட்டாய வசூல் செய்வதாக புகார்-நுண்நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு பதிவு…

எழுதியவர்: mohan July 23, 2020, 12:49 pm

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் கட்டாய வசூல் செய்வதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 16 நுண் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உறுப்பினர்களிடம் நுண் நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் வட்டி வசூல் செய்யக்கூடாது என அறிவித்திருந்தது‌.இந்நிலையில் சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நுண் நிதி நிறுவனங்கள் அடாவடி வசூல் செய்து வருவதாக புகார் தெரிவித்து வந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசுக்கு பல புகார் மனுக்கள் அனுப்பியிருந்தனர். அதனையும் மீறி கட்டாய வசூல் செய்ததால் சுய உதவிக் குழு பெண்கள் போராட்டமும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி தாசில்தார் மகாலட்சுமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி ஆகியோர் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் அரசு உத்தரவு வரும் வரை கட்டாய வசூல் செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த 3 நாட்களாக சுரண்டை வரகுணராமபுரம் பகுதி மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடம் 13 நுண் நிதி நிறுவனங்களை சேர்ந்த 16 குழுக்களிடம் கட்டாய வசூல் செய்து பெண்களை மிரட்டி வருவதாக சிஐடியூ செயலாளர் பொட்டு செல்வம் சுரண்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சுரண்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் 16 அமைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!