18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சின்னாளபட்டி மதுபானக்கடை முன்பு தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை

சின்னாளபட்டி மதுபானக்கடை முன்பு தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை

எழுதியவர்: mohan July 23, 2020, 12:10 pm

ஆத்தூர் தாலுகா சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியான மேட்டுப்பட்டியில் உள்ள அரசு மதுபானகடை முன்பு சின்னாளபட்டி போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வரும் பூண்டி சரவணன் என்பவரை  இரவு சில மர்மநபர்கள் அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது.இன்றுகாலை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து சின்னாளபட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் இறந்தவர் உடலை உடற்கூறு ஆய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலறிந்து நேரில் வந்த மாவட்ட கண்காணிப்பாளர் ரவளி பிரியா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.மேலும்,கொலையுண்ட பூண்டி சரவணனன் என்பவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு அவர்மீது பல குற்ற வழக்குகள் உள்ளதால்முன்விரோதத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!