18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக பாஜக தலைவரை கண்டித்து ராமேஸ்வரம் தீவு வெள்ளாளர் இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்

தமிழக பாஜக தலைவரை கண்டித்து ராமேஸ்வரம் தீவு வெள்ளாளர் இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 23, 2020, 11:22 am

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கடந்த சில தினங்களுக்கு முன் குறிப்பிட்ட சில சமூகத்தை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார்.இதற்கு தமிழகம் முழுவதும் வெள்ளாளர் சமூகத்தினர் இடையே பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக., தலைவர் முருகனை கண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாஜக தலைவர் முருகனை கண்டித்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ராமேஸ்வரம் தீவு வ.உ.சி. வெள்ளாளர் இளைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று ( 22.7.2020) நடைபெற்றது.

தலைவர் ஆர்.பி.வினோத்குமார் தலைமை வகித்தார். செயலர் டி.மணிகண்டன், பொருளாளர் வி.ஏ.சின்னராஜா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர்கள் கே.சாந்தகுமார், எஸ்.ஹரிகரன், துணை செயலர்கள் எஸ்.கணேஷ்குமார், எம்.பாண்டிய ராஜ், எம்.பார்த்தசாரதி, சட்ட ஆலோசகர் எஸ்.எம்.பாரதி முத்து, ஆர்.நந்தகுமார், வி.வீரதனபாலன், என்.கணேசன், என்.ராஜ்குமார், எஸ்.மதன்குமார், என்.செல்லபாண்டி, கே.கமல், எஸ்.சந்துரு, ஆர்.பாஸ்கரன், என்.நம்பு குமார், என்.பாஸ்கரன், கே.அரவிந்த், கே.மாரிமுத்து, என்.நம்புராஜ்குமார், இ.மனோஜ்குமார், கே.வி.எம்.மாரி செல்வம் உள்பட 50க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முருகனை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!