17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல்பள்ளிப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கல்

மேல்பள்ளிப்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கல்

எழுதியவர்: mohan July 22, 2020, 1:12 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றன.செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய உலர் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.விழாவிற்கு மேல் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பானுமதி ஜம்புலிங்கம் தலைமை தாங்கினார்.அப்பகுதியில் குழுமியிருந்த பொதுமக்களிடத்தில் கரோனா தொற்று பாதுகாப்பிலிருந்து பொதுமக்கள், குழந்தைகளை தற்காத்து கொள்வது குறித்தும், முககவசம் அணியும் முறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முன்னிலை வகித்தார்.விழாவிற்கு தலைமை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் திமுக கழக ஊராட்சி நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும்சமூக ஆர்வலர் , மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் இதில் கலந்துகொண்டனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!