17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகர் கேம்பஸ் ஃப்ரண்ட்‌ ஆஃப் இந்தியா சார்பாக +2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு வாழ்த்து சான்றிதழ்..

கீழக்கரை நகர் கேம்பஸ் ஃப்ரண்ட்‌ ஆஃப் இந்தியா சார்பாக +2 தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவருக்கு வாழ்த்து சான்றிதழ்..

எழுதியவர்: ஆசிரியர் July 22, 2020, 12:14 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் கேம்பஸ் ஃப்ரண்ட்‌ ஆஃப் இந்தியா சார்பாக 2019-2020 கல்வியாண்டில் நடத்தப்பட்ட +2 CBSE பொதுத்தேர்வில் 478/500 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு பகுதியை சார்ந்த நூர் குளோபல் அகாடமி பள்ளியில் பயின்ற நஜிமுல் ஹுசைன் மகன் செய்யது ஃபயாஸ்  என்ற மாணவரை ஊக்குவிக்கும் விதமாக கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில்  நகர் தலைவர் காதர் மாணவருக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழும் வழங்கினார். இவருடன் கேம்பஸ் ஃப்ரண்ட் நகர செயலாளர் அஃப்ரித், நகர செயற்குழு உறுப்பினர்கள் சுகைல் மற்றும் ஜகுபஃர் உடன் இருந்தனர். அத்துடன் மாணவருடைய இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவருடைய பெற்றோருக்கும், மாணவருடய மேற்படிப்பு சிறப்பாக அமையவும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!