18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்:

தமிழக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்:

எழுதியவர்: mohan July 21, 2020, 7:35 pm

கொரோனா காலத்தில் இரட்டிப்பு மின் கட்டணம் வசூலிக்கும் அதிமுக அரசை கண்டித்து இன்று பொறையாரில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் இல்லத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் தலைமையில். திமுகவினர் சமூக இடைவெளியுடன் கருப்புக் கொடிகளை ஏற்றி, வீடுகளில் உள்ள பெண்கள் கண்டன பதாகைகளை ஏந்திய வாரு எடப்பாடி அரசைகண்டித்தும் மின்சாரத் துறையில் நடைபெறும்முறைகேடு மின் உயர்வைக் கண்டித்தும் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது மத்திய பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் மின் கட்டண சலுகை அறிவித்ததுபோல், தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், மின் கணக்கீட்டை மீண்டும் சரி செய்ய வேண்டும் என கோரியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் தரங்கம்பாடி பேரூராட்சியில் வெற்றிவேல் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டார்.எடுத்துக்கட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் T.பைலட் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம்எம் சித்திக், மனோகர், ஒன்றிய கவுன்சிலர் மதினா ஜஹவர் உள்ளிட்ட பலர் கைகளில் கருப்புக் கொடிகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.செம்பனார்கோயில் ஒன்றியத்தில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் தலைமையில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், நாகை வடக்கு மாவட்ட தொழில் நுட்ப அமைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சீர்காழியில் நகர திமுக சார்பாக நகர செயலாளர் சுப்பராயன் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக கட்சி உறுப்பினர்கள் அவரவர் இல்லங்களில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!