18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடிமுளைகொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்…பக்தர்கள் இன்றி நடைபெற்ற கொடியேற்றம்…

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆடிமுளைகொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்…பக்தர்கள் இன்றி நடைபெற்ற கொடியேற்றம்…

எழுதியவர்: mohan July 21, 2020, 7:20 pm

உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி ஆண்டு முழுவதிலும் திருவிழாக்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கும். இந்நிலையில் ஆண்டுதோறும் ஆடிமாதம் நடைபெறும் பிரசத்திபெற்ற ஆடி முளைகொட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று முதல் வரும் 30ம் தேதி வரை இவ்விழா நடைபெறும் நிலையில் கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக கொடியேற்றம் உள்ளிட்ட ஆடி முளைக்கொட்டு விழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரம் வரும் 24ம் தேதி அன்று காலை 10 மணியளவில் அம்மன் கோயில் மகாமண்டபம் பள்ளியறை முன்பு அம்மனுக்கு ஏற்றி இறக்குதல் வைபவம் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. மேலும் சீர்பாதம் (கோவிலை சுற்றி ஊர்வலம்)  இன்றி தினமும் ஆடிவீதியில் காலை, மாலை உலா வருவதற்கு பதில் அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் காலை மற்றும் மாலை வேலைகளில் புறப்பாடு நடைபெறும் எனவும் மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.வரலாற்றில் முதன்முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீனாட்சியம்மன் கோவிலில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெற்றதை தொடர்ந்து மற்றொரு முக்கிய விழாவான ஆடிமுளைகொட்டு விழாவும் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!