17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை மாவட்டத்தில் ,மின் கட்டண உயர்வை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ,மின் கட்டண உயர்வை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 21, 2020, 12:38 pm

திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க,  திருவண்ணாமலை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு தமிழக அரசின் மின் உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதன்படி, மாவட்ட கழக செயலாளர் ஆலோசனையின்படிசெங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அவரது வீட்டின் முன்தமிழக அரசின்மின் கட்டண உயர்வை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் முன்னிலையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பிரமுகர்கள் ஆர்.கே.செல்வம், சின்ன பையன்,ஊராட்சி மன்ற துணை தலைவர் பிரேமா வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், செங்கம் நகர தலைவர் சாதிக் பாஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். செங்கம் வட்டம் மேல் பள்ளிப்பட்டு ஊராட்சியில்ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பானுமதிஜம்புலிங்கம் முன்னிலையில் மின்சார வாரியம் முன் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் செய்யப்பட்டது. ஊராட்சி கழக நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும்,செங்கம் தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு, செங்கம், ஜவ்வாதுமலை, உட்பட அனைத்து ஒன்றியங்களிலும் நகரங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டமானது சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

செங்கம் செய்தியாளர், சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!