இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் உத்திரகோசமங்கை உள்வட்டம் கிராமங்களுக்கான 1429-ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலருமான கொ.வீர ராகவ ராவ் தலைமையில் இன்று (20.7.2020) நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களுக்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான தீர்வாய தணிக்கை இன்று (20.07.2020) தொடங்கி 27.07.2020 வரை (ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறுகின்றது. அதன்படி, கீழக்கரை வட்டாட்சியர்
அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலருமான கொ.வீர ராகவ ராவ் தலைமையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை நடைபெற்றது. வருவாய் தீர்வாய தணிக்கையின் முதல் நாளான இன்று உத்திரகோசமங்கை உள்வட்டத்திற்குட்பட்ட எக்ககுடி, பனைக்குளம், மாலங்குடி, மல்லல், ஆலங்குளம், உத்திரகோசமங்கை, நல்லிருக்கை ஆகிய 7 வருவாய் கிராமங்களுக்கான தணிக்கை நடைபெற்றது. இத்தணிக்கை முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய்த்துறை கணக்கு பதிவேடுகள், பட்டா ஆவணம் வழங்கியது தொடர்பான பதிவேடுகள், அடங்கல், கிராம வரைபடம் உள்ளிட்ட கணக்குகளை சரியான நிலையில் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார். மேலும், கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால், வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாய கணக்குகள் தணிக்கை பணிகள் மட்டுமே நடைபெறுகிறது. பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை இணையவழியில் சமர்ப்பித்திட https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணைய தளம் செயல்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் தீர்வாயம் தொடர்பாக பொதுமக்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் 20.07.2020 முதல் 27.07.2020 வரை மனுக்களை சமர்ப்பிக்கலாம். இம்மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு தீர்வு காணப்படும்.இந்த நிகழ்வின்போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.எஸ்.சேக்அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பெ.தனுஷ்கோடி, உதவி இயக்குநர் (நில அளவை) ஆர்.கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) சுகுமாறன், வட்டாட்சியர் வீரராஜா உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கை
எழுதியவர்: mohan July 20, 2020, 5:54 pm




You must be logged in to post a comment.