18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காஞ்சிரங்குடி சம்பவம்.. எஸ்டிபிஐ., கண்டனம்

காஞ்சிரங்குடி சம்பவம்.. எஸ்டிபிஐ., கண்டனம்

எழுதியவர்: mohan July 20, 2020, 12:02 pm

ராமநாதபுரம் எஸ்டிபிஐ., மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன்அறிக்கை: ராமநாபுரம் மாவட்டம் காஞ்சிரங்குடியில் ஜூலை 18, 19ல் நடந்த சம்பவங்களில் நீதி நிலை நாட்டப்படவேண்டும் என்பதே எஸ்டிபிஐ., கட்சி நிலைப்பாடு. பாதிக்கப்பட்டோருக்கு நீதி, நிவாரணம் கிடைக்க வேண்டும். காஞ்சிரங்குடி ஜமாத்தார்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலைவெறித்தாக்குதல் நடத்தியும், வழிபாட்டுத்தலம் அருகே நிறுத்திய வாகனங்களை சேதப்படுத்தியோர்மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வாகனங்களை சேதப்படுத்தியதாக புகார் செய்ய கீழக்கரை காவல் நிலையம் சென்ற வாகன உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு பதியும் நோக்கத்தில் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் ஒரு தரப்பினரை, குற்றப்படுத்தும் நோக்கில் செயல்படும் கீழக்கரை காவல் துறை நடவடிக்கையை கண்டித்து நீதி விசாரணை நடத்தி பாரபட்சம் இன்றி பாதிக்கப்பட்டோருக்கு நீதி பெற்றுத்தரவேண்டும் என மாவட்ட காவல் நிர்வாகத்தை எஸ்டிபிஐ., கட்சி சார்பில் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!