17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வரும் 21-ம் தேதி கருப்புக்கொடி கட்டி போராட்டம்; செங்கம் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

வரும் 21-ம் தேதி கருப்புக்கொடி கட்டி போராட்டம்; செங்கம் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

எழுதியவர்: mohan July 19, 2020, 12:32 pm

வரும் 21-ம் தேதி கருப்புக்கொடி கட்டி போராட்டம்; செங்கம் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையில், திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில், மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு, வழிகாட்டுதல்படி, கொரோனா காலத்திலும் அனைத்து தரப்பு தமிழக மக்களையும் பாதிக்கும் அதிமுக அரசின் மின் கட்டணகொள்ளையை கண்டித்து வரும் 21-07-2020 நடைபெறவிருக்கும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற வைப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.ஆலோசனை கூட்டம் திமுக செங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டராம்பட்டு செங்கம் கிழக்கு, மேற்கு (ம) ஜவ்வாதுமலை தெற்கு, ஆகிய ஒன்றியங்களின் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் செங்கம் பேரூராட்சி செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ஆகியோர்கள் சமூக இடைவெளியுடன் சிறப்பாக நடைபெற்றது.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!