17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் பால் கொள்முதல் குறைப்பு! நடவடிக்கை எடுக்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

செங்கத்தில் பால் கொள்முதல் குறைப்பு! நடவடிக்கை எடுக்க பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

எழுதியவர்: mohan July 19, 2020, 12:27 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பால் கொள்முதல் குறைக்கப்பட்டுள்ளதால் பால் உற்பத்தியாளர்கள் பாலை லிட்டருக்கு ரூ.25 விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அதிக அளவில் பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.செங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமப்புறங்களில் பெரும்பாலும் விவசாயிகள் கால்நடைகளைப் பராமரித்து வருகின்றனர். குறிப்பாக கறவை மாடுகள் அதிக அளவில் பராமரிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் செய்து வருகின்றனர்.கடந்த சில தினங்களாக பால் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் பாலின் அளவு குறைக்கப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர் . மேலும் சில நிறுவனங்கள் பாலை வாங்க மறுத்து விடுகின்றனர். இதனை பால் உற்பத்தியாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பல்வேறு குடும்பங்கள் பால் கறவை தொழிலை நம்பியுள்ள சூழலில் பால் கொள்முதல் குறைக்கப்பட்டுள்ளதால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . செங்கம் நகர்ப்புறப் பகுதிகளில் கிராமப்புற பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் ரூ.25க்கு விற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் பால் உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பால் உற்பத்தியாளர்கள் செய்யும் பாலை முன்புபோல முழுவதும் செய்ய பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கம் செய்தியாளர், சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!