18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியார் சிலை அவமதிப்பு செய்ததை கண்டித்து மதுரை அவனியாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலை அவமதிப்பு செய்ததை கண்டித்து மதுரை அவனியாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 18, 2020, 6:32 pm

நேற்று முன்தினம் கோவையில் தந்தை பெரியார் சிலை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டது.,இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரியும் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட அவனியாபுரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டத்தின் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப் தலைமையில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் காளிமுத்து, சட்டமன்ற தொகுதி செயலாளர் பனையூர் சேகர் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.,இந்த ஆர்ப்பாட்டத்தில் 60 வது வட்ட செயலாளர் அறிவழகன், மாவட்ட துணை அமைப்பாளர் தனக்கங்குளம் பழனி, கவி.சென்றாயன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிந்து பெரியார் சிலை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!