18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம்

திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றம்

எழுதியவர்: mohan July 17, 2020, 6:11 pm

திருப்பரங்குன்றம் 1.38 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை அனைத்து வேலைகளும் முடிவடைந்து திறக்கப்படாமல் இருந்து வருகிறது என்றும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் இந்த வேளையில் கொரோனா சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் மருத்துவமனை திறக்கப்பட வேண்டும். என சமூக ஆர்வலர்கள் கூறி வந்த நிலையில். திருப்பரங்குன்றம் தலைமை மருத்துவர் செல்வராஜ் தீவிர ஏற்பாட்டில் முடிக்கப்பட்ட மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் வினய், கண்காணிப்பு அதிகாரி சந்திரமோகன், ஆகியோர் ஆய்வு செய்தனர்.திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை பின்புறம் அதிநவீன வசதிகளுடன் ரூபாய் 1.38 கோடி செலவில் 40 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிறது.இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 40 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடம் திறப்பு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இந்த நிலையில் 40 படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சார்பாக செய்யப்பட்டு வருகிறது.தற்போது திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 2 அவசர சிகிச்சை படுக்கை மேலும் ஆக்சிஜன் வசதியுடன் 40 அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை மற்றும் 8 தற்காலிக படுக்கை என ஒரே நேரத்தில் 50 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்டு வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!