17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2-ல் 93 சதவீதம் தேர்ச்சி

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2-ல் 93 சதவீதம் தேர்ச்சி

எழுதியவர்: mohan July 16, 2020, 4:40 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த கல்வி ஆண்டில் +2 தேர்வு முடிவுகள் வெளியானதில் இங்கு பயின்ற ஜோதிலட்சுமி 400 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும் 396 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும் 3-வது இடத்தை மதுமிதா 395 மதிப்பெண் பெற்றார்.

இவர்களை பாராட்டி தலைமை ஆசிரியர் வி.தயாளன் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பி.டி.புகழ் வேந்தன் இனிப்பு மற்றும் புத்தகத்தை வழங்கினர். இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 92.45 ஆகும். கடந்த ஆண்டு 78 சதவீதம் .நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பி.அஜிஸ் குமார் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 53 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதியதில் 49 பேர் தேர்ச்சி பெற்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!