18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது, 8 வாகனங்களை பறிமுதல் செய்த மதுரை போலீஸார்.

சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது, 8 வாகனங்களை பறிமுதல் செய்த மதுரை போலீஸார்.

எழுதியவர்: mohan July 16, 2020, 11:23 am

மதுரை மாவட்டம். சிலைமான் மற்றும் கீழவளவு காவல் நிலையங்களில், போலீசார் ரோந்து சென்றபோது, விரகனூர் அருகே சட்டவிரோதமாக மணல் திருடி கொண்டிருந்த, ஆண்டி (40) சுரேஷ் கண்ணன் (43) என்பவர்களை கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். கீழவளவு போலீசார் இ.மலம்பட்டி,மணிமுத்தாறு ஓடை அருகே ரோந்து சென்ற போது, அங்கே டிப்பர் லாரி 2, டிராக்டர் மற்றும் டிரைலர் 2, ஜே.சி.பி 1, இருசக்கர வாகனங்கள் 2 ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி மணல் திருட்டில் ஈடுபட்ட குமரேசன் (41) நாகராஜன் (39) என்பவர்களை கைது செய்தனர். மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!