17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் தமாகா சார்பில் காமராஜ் பிறந்த நாள் விழா

ராமநாதபுரம் தமாகா சார்பில் காமராஜ் பிறந்த நாள் விழா

எழுதியவர்: mohan July 16, 2020, 10:52 am

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜரின் 118வது பிறந்த நாள் விழா நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் ரெட்டையூரணியில் உள்ள காமராஜர் சிலைக்கு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமாகா தலைவர் வி.என். நாகேஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

கொரானா வைரஸ் பரவலை தடுப்பு நடவடிக்கையாக வீட்டை விட்டு வெளியே பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கூட்ட நெரிசலான இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட இளைஞர் தலைவர் முகேஷ் குமார், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி தலைவர் சத்தீஸ்வரன், நாகாச்சி கிளை தலைவர் வெள்ளைச்சாமி, மண்டபம் மேற்கு வட்டார தலைவர் ராஜேஸ்வரன், மண்டபம் கிழக்கு வட்டார தலைவர் சுரேஷ்குமார், உச்சிப்புளி நகர் தலைவர் பட்டாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!