17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மயிலாடுதுறை மாவட்டத்தின் சிறப்பு அதிகாரி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டத்தின் சிறப்பு அதிகாரி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு:-

எழுதியவர்: mohan July 15, 2020, 12:27 pm

நாகை மாவட்டத்தை பிரித்து தமிழகத்தின் 38 மாவட்டமாக மயிலாடுதுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைகளை வரையறை செய்ய திருமதி லலிதா ஐஏஎஸ் அவர்களை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு அறிவித்திருந்தது இன்று காலை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அதிகாரி பொறுப்பேற்றுக் கொண்டார் அவருக்கு பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் வாழ்த்து கூறினர்.மயிலாடுதுறை புதிய மாவட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாத் ஐபிஎஸ் நியமித்து தமிழக அரசு அறிவித்தது இதனைத் தொடர்ந்து இன்று மயிலாடுதுறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் எந்த பிரச்சனைகள் குறித்தும் தன்னை நேரில் சந்திக்கலாம் அல்லது தனது செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார் மேலும் கொரானா காலத்தில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் இதனால் கொரோனா பாதிப்பிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!