18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காளையார்கோவில் அருகே ராணுவ வீரர் வீட்டில், மாமியார், மருமகள் இரண்டு பேர் கம்பியால் தாக்கி கொலை. போலீஸார் விசாரணை…

காளையார்கோவில் அருகே ராணுவ வீரர் வீட்டில், மாமியார், மருமகள் இரண்டு பேர் கம்பியால் தாக்கி கொலை. போலீஸார் விசாரணை…

எழுதியவர்: ஆசிரியர் July 14, 2020, 7:14 pm

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முக்கூரணி கிராமத்தில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தியாகு, தனது மகன் ஸ்டீபன் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில் தனது மனைவி, மருமகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சந்தியாகு நேற்று இரவு தோட்டத்திற்கு காவல் காக்க சென்ற நிலையில், வீட்டில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள், தூங்கி கொண்டிருந்த மாமியார் ராஜ குமாரி (60), மருமகள் சினேகா (30) ஆகிய இருவரையும், இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, பணம் நகைகளை கொள்ளை அடித்து தப்பி ஓடியுள்ளனர். காலையில் சந்தியாகு வீட்டிற்கு வந்து பார்த்த போது, தனது மனைவி,  மருமகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவம் இடம் வந்த போலீசார் இரட்டைகொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் கொள்ளையடிக்கப்பட்ட நகை சுமார் 40 சவரன் என தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் அருண் குமார் (பொறுப்பு) நேரில் ஆய்வு செய்து கொலையாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணுவ வீரர் வீட்டில் இரட்டைக் கொலைச் சம்பவம் நடைபெற்றது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!