17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் டவுனில் போக்குவரத்து நெரிசல் – கனரக வாகனங்களை தடை செய்ய வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை

செங்கம் டவுனில் போக்குவரத்து நெரிசல் – கனரக வாகனங்களை தடை செய்ய வேண்டும். பொதுமக்கள் கோரிக்கை

எழுதியவர்: mohan July 14, 2020, 1:17 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கம் நகா் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் போளூா் சாலை மேம்பாலம் வரை இருப்பது ஒரே சாலைதான், மாற்றுச் சாலைகள் ஏதும் கிடையாது.இந்த நிலையில், காலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் காய், கனி கடைகளுக்கு மினி வேன்கள் அதிகளவில் வருகின்றன. அந்த வேன்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டு காய், கனிகள் கிராமப் புறங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்றப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் வெளியூர்களிலிருந்து செங்கம் வழியாக போளூர் ,வேலூர் ஊர்களுக்கு செல்வதால் கனரக வாகனங்களால் செங்கம் டவுன் பகுதியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. கூட்டநெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. தற்போது கொரானா ஏற்படும் அச்சம் ஏற்படும் நிலையில் உள்ளது.இதைத் தொடா்ந்து, 10 மணிக்கு மேல் வெளியூா்களில் இருந்து கடைகளுக்கு பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி பொருள்களை இறக்குகின்றனா். அப்போது நெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து தடைபடுகிறது.இதை செங்கம் காவல்துறையினர் கண்காணித்து கனரக வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்றும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் , பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

செங்கம் செய்தியாளர், சரவணகுமார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!