17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உத்திரங்குடி ஊராட்சியில்  மரக்கன்றுகள் நடும்  நிகழ்ச்சி

உத்திரங்குடி ஊராட்சியில்  மரக்கன்றுகள் நடும்  நிகழ்ச்சி

எழுதியவர்: mohan July 14, 2020, 12:43 pm

மயிலாடுதுறை  மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட உத்திரங்குடி ஊராட்சியில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

 செம்பை ஒன்றிய திமுக செயலாளர் அப்துல்மாலிக், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ் பானு, ஒன்றியக்குழு உறுப்பினர் ஷகிலா அஜிஸ்  உள்ளிட்ட பலர்   கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் லெனின் மேஷாக், துணைத் தலைவர் சங்கை நவீத் ஆகியோர் செய்திருந்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!