17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்திய பருத்தி கழகத்தால் 95 சதவீத பருத்திகொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகள் ஆரவாரம்..

செம்பனார்கோயில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்திய பருத்தி கழகத்தால் 95 சதவீத பருத்திகொள்முதல் செய்யப்பட்டது. விவசாயிகள் ஆரவாரம்..

எழுதியவர்: mohan July 14, 2020, 12:09 pm

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் கலைமகள் கலை கல்லூரியிலும் பருத்தி மறைமுக ஏலம் நாகை விற்பனை கூட செயலாளர் கோ. வித்யா தலைமையில் பருத்தி ஏலம் நடைப்பெற்றது.இதில், இந்திய பருத்தி கழகத்திலிருந்து ரமேஷ், இளங்கோவன், ஆனந்தன் குட்டி குமார், தஞ்சை மாவட்ட வியாபாரி திருமாறன், ராஜவேல், நாகை மாவட்ட வியாபாரி கலியமூர்த்தி, செந்தில்வேலன், விழுப்புரம் பழனி, சந்திரன், நாசர் மற்றும் 15 -க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பருத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர்.விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு முன்னிலையில் ஏலம் நடைபெற்று அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.55.50 க்கு விலை போனது . 700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் 4ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து பயனடைந்தனர்.95 சதவீத பருத்திகள் இந்திய பருத்தி கழகத்தால் கொள்முதல் செய்யப்படதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை  செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!