17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே குடிநீர் தொட்டியிலிருந்து வீணாகும் குடிநீர்.சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

உசிலம்பட்டி அருகே குடிநீர் தொட்டியிலிருந்து வீணாகும் குடிநீர்.சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

எழுதியவர்: mohan July 13, 2020, 5:27 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பஞ்சாயத்தைச் சேர்ந்தது புதுக்கோட்டை கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன..இக்கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக குடிநீர் தேவைக்காக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மேல்நிலை நீர்தேக்க குடிநீர் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.இத்தொட்டியின் வழியாக கிராம குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது.ஆனால் இத்தொட்டி முறையாக பராமரிக்காததால் தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது.தற்போது கோடை காலம் நெருங்கிவரும் சூழ்நிலையில் கிடைக்கும் தண்ணீரையாவது வீணாக்காமல் சேமிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஜனத்தொகையை கருத்தில் கொண்டு கடந்த வருடம் இத்தொட்டி அருகிலேயே ரூ25 லட்சம் மதீப்பிட்டில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.ஆனால் கட்டி முடிக்கப்பட்டு இது நான் வரை மின் இணைப்பு கொடுக்காததால் குடிநீர் தொட்டி காட்சிப் பொருளாகவே காட்சியளித்து வருகிறது.எனவே இத்தொட்டிக்கு மின் இணைப்பு கொடுதது பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!