மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, குப்பணம்பட்டி,மாதரை செட்டியபட்டி ஆகிய பகுதிகளில் இரவில் சுமார் 1 மணி நேரம் மழை
பெய்தது.கடந்த 10 நாட்களாகவே உசிலம்பட்டிப் பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருவதால் கண்மாய்கள் ஊரணிகள் உள்பட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஆடிப்பட்டம் தேடி விதை என்பர்.ஆடி மாதம் பிறப்பதற்குள்ளாகவே மழை பெய்து வருவதால் நிலங்களில் விதைத்து உழுவதற்குரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.இதே போல் ஒரு வாரம் தொடர்ச்சியாக மழை பெய்தால் குடிநீர் பிரச்சனை இருக்காது என நகரப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
உசிலம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை.விவசாயிகள் மகிழ்ச்சி
எழுதியவர்: mohan July 13, 2020, 5:19 pm




You must be logged in to post a comment.