17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெடுவாசல் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும்  நிகழ்ச்சி

நெடுவாசல் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும்  நிகழ்ச்சி

எழுதியவர்: mohan July 13, 2020, 11:18 am

மயிலாடுதுறை  மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்திற்குட்பட்ட நெடுவாசல் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.நெடுவாசல் ஊராட்சி  மன்றத்தலைவர் உமாராணி தனபால் தனது சொந்த நிதியிலிருந்து தென்னை, மா, பலா, நெல்லி, தேக்கு உள்ளிட்ட 10 வகையான 1000- க்கும் மேற்பட்ட மரக் கன்றுகளை  ஊராட்சி பகுதிகளில் உள்ள  சாலை, குளங்கள், வாய்க்கால் ஓரங்களில்  மரக்கன்றுகளை நடும்  பணியை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர்  தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருண், ஒன்றிய துணை பெருந்தலைவர் பாஸ்கர், செம்பை ஒன்றிய திமுக செயலாளர் அப்துல்மாலிக், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராபியா நர்கீஸ் பானு, ஒன்றியக்குழு உறுப்பினர் ஷகிலா அஜிஸ், ஊராட்சி செயலாளர்கள் ஜான் வில்லியம்ஸ், ஜெயக்குமார்  உள்ளிட்ட பலர்   கலந்துகொண்டு  மரக்கன்றுகளை நட்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!