18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தரங்கம்பாடியில் காவல் ஆய்வாளரை தாக்கிய 20 மீனவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு அடையாளம் தெரியாத 20 மீனவர்கள் தலைமறைவு காவல்துறை தேடி வருகிறது

தரங்கம்பாடியில் காவல் ஆய்வாளரை தாக்கிய 20 மீனவர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு அடையாளம் தெரியாத 20 மீனவர்கள் தலைமறைவு காவல்துறை தேடி வருகிறது

எழுதியவர்: mohan July 12, 2020, 10:47 am

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அரசால் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலையை பயன்படுத்தும் கிராமங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 22 கிராம மீனவர்கள் போராட்டம் நடத்தியபோது சுருக்குமடி வலைக்கு ஆதரவாக நண்டலாறு சோதனை சாவடி அருகே போராட்டம் நடத்திய சந்திரபாடி மீனவர்களை தாக்குவதற்காக கட்டை இரும்பு கம்பிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சென்ற கும்பலை தடுத்த நிறுத்திய பொறையார் காவல் ஆய்வாளர் செல்வத்தை தாக்கி மண்டையை உடைத்த அடையாளம் தெரியாத 20 மீனவர்கள் மீது வழக்கு பதிவு.பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில் 147,148,294(b),353, 332 506(ii)ஆகிய பிரிவுகளில் 20 நபர்கள் மீது பொறையார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் காவல் ஆய்வாளர் செல்வத்தை தாக்கிய அடையாளம் தெரியாத 20 மீனவர்கள் தலைமறைவு. அவர்களை கைது செய்ய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனகரதினம் ஆணையின் பேரில் தனிப்படை அமைத்து தாக்குதல் நடத்திய நபர்களையும் தேடி வருகின்றனர்.பொறையார் காவல் ஆய்வாளர் செல்வம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!