17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நபார்டு வங்கியின் நிறுவன நாளை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதி மக்களுக்கு பண்ணை குட்டை அமைக்கும் பணி

நபார்டு வங்கியின் நிறுவன நாளை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதி மக்களுக்கு பண்ணை குட்டை அமைக்கும் பணி

எழுதியவர்: mohan July 11, 2020, 5:50 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் பகுதியில் முதற்கட்டமாக நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணி துவங்கியது.நபாடு வங்கி அதன் நிறுவன நாளை முன்னிட்டு அந்த வங்கியின் உதவியுடன் துவங்கப்பட்டுள்ள இந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல், சிறிய தடுப்பனைகள் மற்றும் வரத்துக்கால்வாய்கள், ஊரணிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வேளாண் சார்ந்த பணிகளை மேற்கொள்ள உள்ளதாக உள்ளது.

.நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் மதுரை மேலாளர் ஹரிகிருஷ்ணராஜ், மாஸ்டர் தொண்டு நிறுவன இயக்குனர் ராஜ்குமார் வேளாண் துணை இயக்குனர் ராமசாமி ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் மகாராஜாதொட்டப்பநாயக்கனூர் நீர்வடி குழு தலைவர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்..இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1598 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் விவசாயிகள் பயனடைந்து வளம் பெற முடியும் என்பதால் இந்த திட்டம் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!