18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் முழு ஊரடங்கு வேண்டுமென வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர்.

உசிலம்பட்டியில் முழு ஊரடங்கு வேண்டுமென வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர்.

எழுதியவர்: mohan July 11, 2020, 1:42 pm

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இதனைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதிகள் பரவை உள்ளிட்ட பகுதிகளில் அரசு சார்பில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்;ளது.திருமங்கலம் பகுதியில் நகராடசி சார்பபில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் உசிலம்பட்டிப் பகுதிகளில் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது.பொதுமக்கள் கட்டாயம் முகக்கவவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் உசிலம்பட்டி பகுதி மக்கள் அரசின் உத்தரவை மதிப்பதாகத் தெரியவில்லை.பொது வெளியில் முகக்கவசம் அணியாமலும் கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் கூட்டம் கூட்டமாக திரிகின்றனர். இதனால் கொரோனா தொற்று ஏற்ப்படும் அபாயம் உள்ளது.மேலும் உசிலம்பட்டிப்பகுதிகளில் கடந்த 10 நாட்களில் காவலர்கள் மருத்துவர்கள் உள்பட 75க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உசிலம்பட்டியில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால் முழ ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் மகேந்திரன்  வழக்கறிஞா் ராமச்சந்திர பீரதீப் தலைமையில் உசிலம்பட்டி கோட்டாச்சியர் ராஜ்குமாரிடம் மனு அளித்தனர்.மனுவை ஏற்றுக் கொண்ட கோட்டாச்சியர் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!