17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…

மதுரையில் இ-பாஸ் சம்பந்தமாக பரவி வரும் குறுந்தகவல்… மதுரை மாவட்ட ஆட்சியர் மறுப்பு…

எழுதியவர்: ஆசிரியர் July 9, 2020, 10:41 pm

கொரோனா  வைரஸ் தொற்றின் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. மதுரை சுற்று வட்டார பகுதியில் 20க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாளர்கள் வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருகிறார்கள்.

காவல்துறையினரின் ஒத்துழைப்போடு இந்த பணிகள் நடைபெற்று வர கூடிய வேலையில், இன்று (09/07/2020) காலை முதல் வாட்ஸ்அப் குழுக்களிலும் முகநூலிலும் சில விஷமிகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

அந்த குறுந்தகவலில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இருந்து மற்றபகுதிக்கு செல்வதென்றால் இ பாஸ் கட்டாயம் வேண்டும் என்றும், அடையாள அட்டை இருந்தால் போதும் என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார் என்பன போன்ற போலியான செய்திகள்  வதந்திகளாக வலம் வந்த நிலையில், அச்செய்தியை மதுரை மாவட்ட ஆட்சியாளர் வினய் மறுத்துள்ளார், அவ்வாறாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!