17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் இரு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.

உசிலம்பட்டியில் இரு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.

எழுதியவர்: mohan July 9, 2020, 6:02 pm

உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இதனைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இரண்டு வங்கிகளில் பணிபுரியுயும் வங்கிப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிகள் மூடப்பட்டன.உசிலம்பட்டி மதுரை ரோட்டிலுள்ள இந்தியன் வங்கியில் காசாளர் பிரிவில் பணிபரியும் ஒருவருக்கும் பேரையூர் ரோட்டிலுள்ள பாராத ஸ்டேட் வங்கியில் தங்க நகை மதீப்பீட்டுப்பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் இரண்டு வங்கிகளும் அடுத்தடுத்து மூடப்பட்டன.இதனையடுத்து வரும் 14ம் தேதி வரை வங்கிகள் மூடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.மேலும் கிருமி நாசினி கொண்டு வங்கிகள் சுத்தம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!