17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கல்வி » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தாசிம்பீவி கல்லூரியில் புதிய தொழில்நுட்ப முறையில் பனை சர்க்கரை தயாரித்தல் பயிற்சிப்பட்டறை….

தாசிம்பீவி கல்லூரியில் புதிய தொழில்நுட்ப முறையில் பனை சர்க்கரை தயாரித்தல் பயிற்சிப்பட்டறை….

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2017, 12:10 pm

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மனையியல் ஆராய்ச்சித்துறை சார்பாக மூன்று நாள் புதிய தொழில்நுட்ப முறையில் பனை சர்க்கரை தயாரித்தல் பயிற்சிப்பட்டறை நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக்குழு இப்பயிற்சிக்கு உதவித்தொகை வழங்கியது.

இந்நிகழ்வு இரண்டு நாள் நிகழ்ச்சியாக 29.08.2017 அன்று காலை 11 மணியளவில் தொடக்கவிழா இறைவணக்கத்துடன் துவங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா அவர்கள் தலைமையுரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பி. மாரியம்மாள், பொது மேலாளர் மாவட்ட தொழில் முனைவோர் மையம்இ இராமநாதபுரம், சுயஉதவிதொகை தொடர்பான செய்திகளை சுயஉதவிகுழு மக்களுக்கு விவரித்தார். ஜெ.தினேஷ், தொழில்நுட்ப ஆலோசகர், டினு டெக்னாலஜி, கோயம்புத்தூர், சுயஉதவிகுழு மக்களுக்கான பயிற்சி வகுப்பினை செய்து காட்டினார். ஆர்.லட்சுமி ஸ்ரீ உதவிபேராசிரியை, மனையியல் மற்றும் ஆராய்ச்சித்துறை நன்றியுரை வழங்க இனிதே முதல்நாள் பயிற்சிப்பட்டறை நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!