18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கம்பத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார இணை இயக்குநரிடம் இசுலாமியர்கள் ஆலோசனை கூட்டம்

கம்பத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க சுகாதார இணை இயக்குநரிடம் இசுலாமியர்கள் ஆலோசனை கூட்டம்

எழுதியவர்: mohan July 8, 2020, 5:37 pm

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனிமாவட்ட ஜமாத்துல்உலாமா சபை மற்றும் கொரானாரிலிப் டீம் மற்றும் கம்பம் வாவேர் பள்ளி தலைவர் மருத்துவர் சையது சுல்தான்  ஆலோசனையின்படிமாவட்ட ஆட்சியருக்கு கம்பத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதன் சம்பந்தமாக கோரிக்கை மனு  அளித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனையின்படி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்  தலைமையில்  மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது .அதில் கம்பம் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் சம்பந்தப்பட்ட பரிசோதனை நாளை முதல் செய்வதென முடிவு செய்யப்பட்டது எனவும் இது சம்பந்தமாக சுகாதார துறையை சேர்ந்த முப்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்ய இருக்கிறார்கள் எனவும் ஜமாத்துல் உலாமா சபை மற்றும் கொராணா லீப் டீம் தெரிவித்தார்கள் .கலந்தாய்வு கூட்டத்தில் தேனி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் M.M. சையத் இஸ்மாயில்,தண்டுபாளையம் பள்ளி தலைவர் வெற்றி A.முஸ்தபா ,செயலாளர் ,I.நூர் முஹம்மது தேவதானப்பட்டி பள்ளி நிர்வாகி M.M.நிஜாமுதீன். மற்றும் கம்பம் வாவேர் பள்ளி தலைவர் பாவா பக்ருதீன் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள் . சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!