17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏம்பல் சிறுமி படுகொலை. நீதி கோரி ஆர்ப்பாட்டம்

ஏம்பல் சிறுமி படுகொலை. நீதி கோரி ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan July 7, 2020, 12:54 pm

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஜெயப்பிரியா குடும்பத்திற்கு ரூ.25 லட்ச நிவாரணம் வழங்க வேண்டும், சிறுமியின் படுகொலை வழக்கை தனி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேவேந்திர வேளாளர் சமுதாய மக்கள் மற்றும் தோழமை இயக்கம் அனைத்து சமுக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் இன்று (07/7/2020) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தேவேந்திர வேளாளர் சமுதாய மக்கள் மற்றும் தோழமை இயக்கத் தலைவர் அழகர்சாமி பாண்டியன் தலைமை வகித்தார். இதில் ஆர்.ஜி.மகாலிங்கம், களத்தாவூர் அழகேசன், தவ அஜீத், ராமகிருஷ்ணன், படையப்பா, மயில்சாமி, இளங்கோவன், மகி, சண்முக பாண்டியன், சத்தியராஜ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!