ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் தமிழ்நாடு மின்சார
வாரிய கிளை அலுவலகம் இயங்கி வருகிறது.தற்போது கொரொனா நோய்தொற்று நாடெங்கிலும் பரவிவரும் சூழலில் அரசு பலமுறை மின்கட்டணம் செலுத்த காலநீட்டிப்பு செய்தும் பணம் செலுத்தாமல் சுமார் 800 க்கும் மேற்பட்ட மின் இனைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மின் பயனீட்டாளர்களுக்கு நினைவு படுத்தும் விதமாக சித்தையன்கோட்டை கிளை அலுவலகத்தை சார்ந்து உள்ள பகுதிகளான சித்தையன்கோட்டை கோட்டை பேரூராட்சி பகுதிகள் மற்றும் ஆத்தூர், அக்கரை பட்டி,மல்லையாபுரம் ஆகிய பகுதிகளில் ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.
சித்தையன்கோட்டையில் உள்ள கிளை மின்வாரிய அலுவலகம் சார்பாக மின்கட்டணம் செலுத்த வேண்டி ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு
எழுதியவர்: mohan July 6, 2020, 1:42 pm




You must be logged in to post a comment.