17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முழு ஊரடங்கில் அலட்சியத்தில் செயல்படும் மதுரை மக்கள். நோய் பரவும் அபாயம். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்…

முழு ஊரடங்கில் அலட்சியத்தில் செயல்படும் மதுரை மக்கள். நோய் பரவும் அபாயம். நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்…

எழுதியவர்: mohan July 6, 2020, 10:42 am

கொரோனா வைரஸ் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தி அடுத்த தொற்று எண்ணிக்கையும் அதிகமானது .இதனை அடுத்து மதுரை மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு மற்றும் திருப்பரங்குன்றம் பறவை பேரூராட்சி மற்றும் மதுரை மேற்கு கிழக்கு ஒன்றியங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை மேலும் ஒரு வாரம் நீட்டித்து வருகிற 12ம் தேதி வரையிலும் இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் இன்று மதுரையில் எப்பொழுதும் போல வாகனங்கள் பல பகுதிகளில் செல்களுடன் செல்கிறது. நோய்களின் தீவிரம் அறியாமல் எங்கே செல்கிறார்கள் என யாருக்கும் தெரியவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர். குறிப்பாக மதுரை பைபாஸ் சாலை சிம்மக்கல் கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படும் அளவிற்கு இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் வாகனம் சென்று வருகிறது. இது பொது முடக்கம் தானா என பலருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது இதனால் அதிக அளவு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை களைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!