18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் மதுரை சிறைக்கு மாற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் July 4, 2020, 8:27 pm

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரை பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குலத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மகன் பெனிக்ஸ் ஆகிய இருவரை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்று அவர்களை தாக்கி கொடுமைப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்த நிலையில் அவர்கள் இருவரும் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் உதவி சார்பு ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ் , பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட சிறையில் பாதுகாப்பு பிரச்சனை உள்ளதால் இதனை அடுத்து சிறைத்துறை நிர்வாகம் அதிரடியாக அவர்களை இன்று (04/07/2020) மதியம் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

உடனடியாக தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி சிறையிலிருந்து ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரை டிஎஸ்பி தலைமையிலான 10 பேர் பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்து வந்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

செய்தியாளர். வி காளமேகம் .மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!