17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புதிய நியாயவிலைகடை கட்டிடத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

புதிய நியாயவிலைகடை கட்டிடத்தை சீர்காழி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.

எழுதியவர்: mohan July 4, 2020, 5:15 pm

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பெருந்தோட்டம் ஊராட்சியில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த நியாயவிலைகடை மக்களின் கோரிக்கையை ஏற்று மக்களின் நலனுக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நீதியில் ரூ. 11லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைகடை கட்டிடம் திறக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சீர்காழி தொகுதி அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் பி.வி.பாரதி கலந்துக்கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய கட்டடைத்தை திறந்து வைத்தார். பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை பொருட்களை வழங்கினார்.

பெருந்தோட்டம் ஊராட்சி கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று சென்றனார். பெருந்தோட்டம் ஊராட்சி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் புதிய கட்டிடம் கொண்டு வந்த தமிழக அரசுக்கும், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி க்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள், வட்ட வழங்கல் அலுவலர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!