மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 20வது வார்டைச் சேர்ந்தது ஆர்.கே.தேவர் தெரு –வண்ணாரப் பேட்டைத் தெரு.இத்தெருக்களில் கடந்த 6 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும் கடந்த ஒரு மாதமாக போர்வெல்
பழுதானதால் உப்புத்தண்ணீர் விநியோகமும் இல்லை.இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் பதில் இல்லை.இதனால் ஆவேசமடைந்த மக்கள் பெண்கள் உள்பட சுமார் 60க்கும் மேற்ப்பட்டோர் தங்கள் தெரு சாலையில் காலிங்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த நகராட்சி அதிகாரிகள் பொது மக்களிடம் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து பெண்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.
உசிலம்பட்டியில் குடிநீர் வழங்கக் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
எழுதியவர்: mohan July 4, 2020, 2:02 pm




You must be logged in to post a comment.