18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

செங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan July 4, 2020, 1:27 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்திற்கு சிவா முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் சுந்தர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறவேண்டும், இஎம்ஐ உள்ளிட்ட நுண் நிதி கடன்களை முழுவதும் ரத்து செய்திட வேண்டும், மின் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், கொரோனா காலம் முடியும் வரை மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!