18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றாலம் காவலருக்கு கொரோனா தொற்று..காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரம்..

குற்றாலம் காவலருக்கு கொரோனா தொற்று..காவல் நிலையம் மூடப்பட்டு தடுப்பு பணிகள் தீவிரம்..

எழுதியவர்: ஆசிரியர் July 3, 2020, 3:52 pm

குற்றாலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவர் வசிக்கின்ற பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.  மேலும் குற்றாலம் காவல் நிலையம் மூடப்பட்டது.

காவல் நிலையம் பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் குற்றாலம் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குற்றாலம் காவல்துறை மற்றும் அப்பகுதி பொது மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!