17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் பகுதியில் எந்தவித அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் நிறுத்தம்.

செங்கம் பகுதியில் எந்தவித அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் நிறுத்தம்.

எழுதியவர்: mohan July 2, 2020, 4:27 pm

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு பகுதியில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.மேல்பள்ளிப்பட்டு ஆண்டிப்பட்டி, மேல்வணக்கம்பாடி, புளியம்பட்டி, மேல்செங்கம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக எந்தவித அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் விவசாயக் கிணறுகளில் அவ்வப்போது ஊற்றெடுக்கும் தண்ணீரை பயிா்களுக்கு பாய்ச்ச முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்படுகிறது.மேலும், பொதுமக்களும், வியாபாரிகளும் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால், மின் வாரிய அலுவலகம் நடவடிக்கை எடுத்து ஏதேனும் மின்சாரம் குறித்த பணிகள் நடைபெற்றால், அதை முன் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம் செய்தியாளர், சரவணகுமார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!