18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கன்னியாகுமரி பகுதியில் தமிழக விவசாய பிரிவு சார்பாக ராகுல்காந்தி பிறந்த தின விழா..

கன்னியாகுமரி பகுதியில் தமிழக விவசாய பிரிவு சார்பாக ராகுல்காந்தி பிறந்த தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் July 2, 2020, 3:34 pm

தமிழக விவசாய பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் G.ஜோஸ் மைக்கிள் ராபின்(JMR) ஏற்பாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் எழுச்சித்தலைவர் ராகுல்காந்தி 50ஆவது பிறந்தநாள் விழாவை “விவசாயிகள்பாதுகாப்பு தினம்” ஆக 50 நாட்கள் கொண்டாடிடதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாயப் பிரிவு மாநில தலைவர், S. பவன்குமார் வழிகாட்டுதலின்படியும், விவசாய பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் . G.ஜோஸ் மைக்கிள் ராபின் (JMR) ஏற்பாட்டில் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான H.வசந்தகுமார் தலைமையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் விவசாயிகளுக்கு, குழந்தைகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் 501 இலவச மரங்கள் வழங்கும் விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 1 – வது வார்டு பகுதியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பல நிர்வாகிகளும் , தொண்டர்களும், பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!