17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிபதியை அவமதித்த காவல்துறையினரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்…..

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிபதியை அவமதித்த காவல்துறையினரை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்…..

எழுதியவர்: ஆசிரியர் July 1, 2020, 4:21 pm

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் காவல்துறையை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த வாரம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு கோவில்பட்டி சிறைச்சாலையில் இறந்த வணிகர்கள் ஜெயராஜ் ,பீனிக்ஸ் ஆகிய தந்தை-மகன் வழக்கு சம்பந்தப்பட்ட விசாரணைக்காக சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தலைமையிலான நீதிமன்ற ஊழியர்கள் சென்றனர்.

அப்போது காவல் நிலையத்தில் நீதிபதி மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அவமதிக்கப்பட்ட தாக விசாரணைக்கு சென்ற நீதிபதி பாரதிதாசன் அறிக்கை சமர்பித்தார். நீதிபதியை அவமதித்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் To சிவகாசி சாலையில் கண்டன பதாகைகளை ஏந்தி மறியலில் ஈடுபட்டு தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். வழக்கறிஞர்களின் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலான சாலை மறியலால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!