17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் June 30, 2020, 3:32 pm

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது மம்சாபுரம் கிராமம். இக்கிராமத்தில் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மூன்றாவதாக ஒரு கடையை திறக்க முடிவு செய்த மாவட்ட நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் – மம்சாபுரம் பிரதான சாலையில் இன்று கடையைத் திறந்தது.

இந்நிலையில் இன்று காலை மம்சாபுரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காந்தி நகரில் இருந்து நடைபயணமாக வந்து புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றம் அதிகரிக்கவே சம்பவ இடத்திற்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல் யேசுதாஸின் தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் எதிர்ப்பை மீறி கடை திறக்கப்பட்டால் கடையை அடித்து நொறுக்க போவதாக அறிவித்தனர் .பிரதான சாலையில் ஏற்பட்ட மறியலால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!