17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இன்னர் வீல் சார்பில் மீனவப் பெண்களுக்கு சுகாதார பொருட்கள் விநியோகம்..

இன்னர் வீல் சார்பில் மீனவப் பெண்களுக்கு சுகாதார பொருட்கள் விநியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் June 29, 2020, 10:20 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் முத்துப்பேட்டை இந்திரா நகரில் மீனவப் பெண்கள் 100 பேருக்கு ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் சுமார் 1,300 சானிட்டரி நாப்கின் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. இராமநாதபுரம் அண்ணா நகர் பெண்களுக்கு இன்னர் வீல் சங்கம் சார்பாக  650 சானிட்டரி நாப்கின் வழங்கப்பட்டது.

இதில், மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து  சங்கத் தலைவர் கவிதா செந்தில்குமார்,  கொரானா பரவலை தடுக்க பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து  செயலர் கிருத்திகா ரகுநாத் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  முத்துப்பேட்டை ஊராட்சி தலைவர் வியாகுல சந்தியாகு, சர்ச் பார்க் லெவேல் ஆகியோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் ரோட்டரி சங்க செயலர் மார்னிங் ஸ்டார் செந்தில்குமார் செய்திருந்தார். .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!