18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொற்று பாதித்த இடங்களில் தடுப்புகள் அமைக்காமல் அதன் அருகே செயல்படும் மீன் மார்க்கெட் சமூக தொற்று ஏற்படும் என அச்சம்..

தொற்று பாதித்த இடங்களில் தடுப்புகள் அமைக்காமல் அதன் அருகே செயல்படும் மீன் மார்க்கெட் சமூக தொற்று ஏற்படும் என அச்சம்..

எழுதியவர்: ஆசிரியர் June 28, 2020, 7:21 pm

இராஜபாளையத்தில் கொரோனா தொற்று பாதித்த இடங்களில் தடுப்புகள் அமைக்காமல் அதன் அருகே செயல்படும் மீன் மார்க்கெட் சமூக தொற்று ஏற்படும் என பொதுமக்கள் அச்சபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான காமராஜர் நகர், கவிமணி தேசிய விநாயகம் தெரு, சிதம்பரபுரம் தெரு, மலையடிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் 5 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் கிராம பகுதிகளான  மேலவரகுணராம புரம், தளவாய்புரம் ,உள்ளிட்ட பகுதிகளில் நான்கு பேருக்கும் மொத்தம் ஒன்பது பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது அதன் அருகே இருவருக்கு ஒரே நாளில் இரண்டு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் அல்ல வெளியூருக்கு சென்றவர்களும் அல்ல. ஆனால் இவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சமூக பரவல் ஏற்பட்டுள்ளது என்ற அச்சத்தில் உள்ளனர். இருப்பினும் அந்த பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது அந்த பகுதியில் தடுப்பு அமைக்காமல் மீன் வியாபாரிகளை கட்டுப்படுத்தாமலும் பொதுமக்களையும் கட்டுப்படுத்தாமலும் நகராட்சி நிர்வாகம் அலட்சியப்போக்காக செயல்படுவதாக சமூக ஆர்வலர் குற்றம்சாட்டுகின்றனர். உடனடியாக தொற்று ஏற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து வெளியாட்கள் உள்ளே வராமலும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!