18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » ராமேஸ்வரத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை ஆறு பேர் கைது.. 155 மது பாட்டில்கள் பறிமுதல்

ராமேஸ்வரத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை ஆறு பேர் கைது.. 155 மது பாட்டில்கள் பறிமுதல்

எழுதியவர்: ஆசிரியர் June 28, 2020, 7:16 pm

ராமேஸ்வரத்தில் திருட்டுத்தனமாக மது பாட்டில் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இராமநாதபுரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக அலைபேசி எண்ணிற்கு (94899 19722) தொடர் புகார்கள் வந்தன. இதனடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுறுத்தல் படி தனிப்படையினர் ராமேஸ்வரம் நகர் காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் தனிப்படையினர் இன்று (28.6.2020) சோதனை நடத்தினர்.

இதில்  திட்டகுடியைச் சேர்ந்த நாகராஜ் – 58, கே. பர்வதம் பகுதியைச் சேர்ந்த  குமார் 29, தம்பியான் கொல்லையைச் சேர்ந்த  கஜேந்திரன் 41,  ஓலைக்குடாவைச் சேர்ந்த சுதன் 32, சன்னதி மடம் பகுதியைச் சேர்ந்த மணி 34, ஏரகாடுவைச் சேர்ந்த  தர்மராஜ் 33 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 155 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!