17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருகே கொரானா பாதித்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை..

திருப்பரங்குன்றம் அருகே கொரானா பாதித்த பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2020, 9:11 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் கதிர்வேல் நகர்ப்பகுதிகளில் சென்னையிலிருந்து வந்த இருவருக்குமே கொரான தொற்று உறுதிசெய்யப்பட்டது.

மேலும் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினர் தனிமையில் இல்லாமல் வெளியில் சுற்றுவதாகவும் இதனால் கொரானா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.

இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் வில்லாபுரம் மாநகராட்சி 62வது வார்டு கதிர்வேல் நகர் 2வது தெருவினை சீல் வைத்து அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் வீடு வீடாக கணக்கெடுப்பு பணிகள் மற்றும் நோய் விவரங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!