18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கீழக்கரையில் ஆய்வு..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கீழக்கரையில் ஆய்வு..

எழுதியவர்: ஆசிரியர் June 27, 2020, 6:51 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகளவில் வெகு தீவிரமாய் கரோனா வைரஸ் பரவி வரும் காரணத்தினால் இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கீழக்கரை பகுதிகளில் தீவிர ஆய்வு நடத்தினார்.

கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்கள். கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கீழக்கரை பகுதி முழுவதும் கபசுர குடிநீர் வழங்கவும் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இடத்தில் அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் அனைவருக்கும் சத்து மாத்திரைகள் வழங்குவும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்தார்.

கீழக்கரை தாசில்தார் வீர ராஜா கீழக்கரை நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தங்க கிருஷ்ணன் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பூபதி, நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி மற்றும் பலர் உடன் இருந்தார்கள்

கீழை நியூஸ் S.K.V சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!